Blog Archive

Friday 13 May 2011

மாஸ்லோவின் தேவை படியமைப்பு கோட்பாடு

உளவியல்

மாஸ்லோவின் தேவை படியமைப்பு கோட்பாடு

மாஸ்லோவின் தேவை படியமைப்பு கோட்பாடு (Maslow's hierarchy of needs) என்பது ஆப்ரஹாம் மாஸ்லோ (Abraham Maslow) என்பவரால் 1943ல் அறிமுகப்படுத்தப்பட்ட ஒர் உளவியல் சார் கோட்பாடு ஆகும். இக் கோட்பாடு முகாமைத்துவக் கற்கைகளில் மனிதஊக்கப்படுத்தல் (Motivation) சார் கோட்பாடுகளில் ஒன்றாக உள்ளது. மாஸ்லோவின் இக் கோட்பாட்டில் மனிதன் என்பவன் முடிவில்லாத பலவித தேவைகளைக் கொண்டிருக்கும் வர்க்கமாவான். ஒரு தேவை பூர்த்தியானதுடன் அவன் இன்னொரு தேவையின் திருப்தியினை நாடி நிற்பான் எனவும், இத்தகைய தேவைகள் ஒரு வரிசை அமைப்பாக காணப்படும் என்றும் கூறினார். இத்தகைய தேவைகளை 5 வகையாக பிரித்து தேவைகளையும் மக்களின் எண்ணிக்கையையும் தொடர்புபடுத்தி அவர் ஒரு பிரமிட் வடிவ விளக்கப்படத்தினை இக் கோட்பாட்டில் முன்வைத்தார்.

இவ் வரைபடத்தில் கீழ் பாகத்தில் காணப்படும் மூன்று வகையான தேவை மட்டங்கள் தாழ் தேவைகள் அல்லது பௌதீகத் தேவைகள் எனவும், உயர் மட்டத்தில் காணப்படும் இரண்டு வகையான தேவைகள் உயர் தேவைகள் அல்லது உளவியல் தேவைகள் எனவும் வகைப்படுத்தப்பட்டுள்ளது. கீழ் மட்டத் தேவைகள் பூர்த்தியானதும் அம் மனிதன் அதனை அடுத்துள்ள உயர்மட்ட தேவையினை பூர்த்தி செய்யும் நோக்கில் உந்தப்படுவான் என மாஸ்லோ இக் கோட்பாட்டில் வரையறுத்துள்ளார

No comments:

Post a Comment