கேரன் ஜார்ஜ் தனது 10 வயதான மகன் அலெக்ஸ் மூளை வளர்ச்சி குன்றியவன் என கண்டறிந்தபோது அவனுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க மனமில்லாதவராய் இருந்தார். மாற்று சிகிச்சை அளிக்க விரும்பியபோது மூளை ஆற்றலை வளர்க்கும் மென்பொருள் பயிற்சி பற்றி அவர் அறிய நேர்ந்தது. Cogmed என்பது மூளை ஆற்றல் கட்டுக்கோப்பு பயிற்சியாகும். இப்பயிற்சி மூலம் தனது மகனின் மூளை ஆற்றலை வளர்த்து அதன் செயல்பாட்டை அதிகரிக்கும் முயற்சியில் தாயார் ஈடுபட்டார். 5 வார காலம் அலெக்ஸ் கணினி முன்னால் குறைந்தது ஒரு மணிநேரம் செலவழித்து அதன் பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டியிருந்தது. பயிற்சி என்ன என்று நினைக்கிறீர்களா! இயந்திர மனிதனோடு அலெக்ஸ் தனனுடைய அடிப்படை அறிவை கொண்டு போட்டியிட வேண்டும். பயிற்சியில் விடை கூற அவன் தவறான விசையை அழுத்திவிட்டால், இயந்திர மனிதன் தான் விழிபிதுங்கி நிற்பதை கேலிப்படத்துடன் காட்டி, விட்டுவிட்டு எரியும் விளக்கின் மூலம் சரியான முறையை தெளிவுபடுத்தும். அந்த பயிற்சிக்கு பிறகு அலெக்ஸினுடைய மனதை ஒருமுகப்படுத்தும் திறன், நினைவாற்றல் மற்றும் அன்றாட வாழ்வு செயல்பாடுகளில் மிக பெரிய மாற்றங்கள் ஏற்பட்டன.
மூளை ஆற்றல் கட்டுக்கோப்பை மேம்படுத்த வளரும் தொழில்துறை தான் இந்த கணினி பயிற்சி முறை. இதனை மூளை வளர்ச்சி குன்றியவர்கள் மட்டுமல்ல நிகைவிழப்பு, அடிக்கடி கவன இழப்பால் பாதிக்கப்படுவோடும் பயன்படுத்துகின்றனர். மூளை வளர்ச்சி குன்றிய குழந்தைகளின் நிலையை மேம்படுத்தி, அவர்களது மூளை ஆற்றலின் கட்டுக்கோப்பை உருவாக்கும் மென்பொருட்களில் ஒன்று தான் cogmed. அமெரிக்காவில் இத்தகைய மூளை வளர்ச்சி ஆற்றலுக்கான மென்பொருட்களின் விற்பனை 2005 லிருந்து 2007 ஆண்டிற்குள் இரண்டு மடங்காகி 225 மில்லியன் அமெரிக்க டாலராகியது என்று ஷார்ப்பிரென்ஸ் என்ற ஆலோசனைக்குழுவின் ஆய்வில் தெரியவந்துள்ளது. இத்தகைய பொருட்களுக்கான சந்தை பரவல் ஏற்படுவதற்கான காரணங்கள் என்னவென ஆராய்ந்தால் வளரும் தலைமுறையினர் நினைவாற்றல் இழப்பு மற்றும் மூளையின் செயல்பாடுகளை இழக்கும் நிலையை குறைக்கும் ஆசை தான் அடிப்படை என்று தெரிய வருகிறது.
இத்தகைய மென்பொருட்களின் வளர்ச்சி எந்த அளவிற்கு உயர்ந்துள்ளது என்றால் நலக்காப்பீட்டு நிறுவனங்கள் கூட மூளை ஆற்றல் கட்டுக்கோப்பை வளர்க்கும் மென்பொருட்களை பயன்படுத்தி, தங்களிடம் நலக்காப்பீடு செய்துள்ள உறுப்பினருக்கு சலுகை கட்டணத்தில் பயிற்சிகள் வழங்குகின்றன. எடுத்துக்காட்டாக ஹூமெனே என்ற நலக்காப்பீட்டு நிறுவனம் கற்றல் மற்றும் நினைவாற்றலை முன்னேற்றுவதற்கு மூளை ஆற்றல் கட்டுக்கோப்பிற்கு பயிற்சிகள் வழங்குகின்ற போசிட்டு சையின்ஸ் என்ற நிறுவனத்தோடு இம்முயற்சியை மேற்கொண்டு வருகிறது. இது தற்போது தான் வெகுவாக வளர்ந்து வருகின்ற துறையாதலால் எவ்வித வர்த்தக மாதிரி வெற்றிகரமாக அமையும் என்பதில் தெளிவுகள் இல்லை. Nintendo என்ற நிறுவனம் மூளை ஆற்றல் கட்டுக்கோப்பு சிகிச்சைக்கு பயனுள்ளதாக நிரூபிக்ப்படாத கணினி விளையாட்டுக்களை உருவாக்கி வருகின்றது. Nova Vision எனப்படும் தனியார் தொழில் நிறுவனம் பார்வைதிறனை அதிகரிக்கும் முயற்சிகளை மேம்படுத்தி வருகிறது. அமெரிக்க உணவு மற்றும் மருத்துவ நிர்வாக அமைப்பு வலிப்பு மற்றும் மூளை காயங்களிலிருந்து மீண்டுவரும் நோயாளிகளின் பார்வை திறனை அதிகரிக்கும் சிகிச்சைக்கான அங்கீகாரத்தை Nova Vision நிறுவனத்திற்கு வழங்கியுள்ளது.
இத்துறையில் சிகிச்சை தரவுகள் இல்லாத எவ்வித மென்பொருள் முயற்சிகளும் நீண்டகால வளர்ச்சியடைய முடியாது. எனவே சரியான ஆய்வுகள் மூலம் பயிற்சிகளை விளக்குவது வெற்றியை கொணரும். Cogmed மென்பொருளும் மூளை வளர்ச்சி குன்றிய அல்லது நினைவு மற்றும் கவனம் தொடர்பான பயிற்சிகளுக்கு ஏற்றததானதாக அமெரிக்க உணவு மற்றும் மருத்துவ நிர்வாக அமைப்பால் இதுவரை ஏற்றுக்கொள்ளப்படவில்லை. ஆனால் அதனைப்பற்றி வெளியிடப்பட்ட சில ஆய்வுகள் மூளையின் குறுகியகால வளர்ச்சியை தூண்டுகின்றன என்பதை நிரூபிக்கின்றன. Cogmed என்ற மென்பொருள் பயிற்சியை பொறுத்தவரை குறைந்தகால நினைவாற்றல் வளர்ச்சி பற்றிய உடனடி பயன்கள் ஊக்கமூட்டுவதாக இருந்தாலும் அது எவ்வளவு நாள் தொடரும் என்பதில் தெளிவுகள் இல்லை. இத்தகைய மூளை ஆற்றல் வளர்ச்சிக்கான கணினி மென்பொருள் பயிற்சி பெறுகின்ற குழந்தைகள் பெற்றோரின் மேற்பார்வை மற்றும் தொடர் பயிற்சி மூலம் தான் இப்பயிற்சியில் தொடர்ச்சியான பயனை பெற முடியும். எனவே இம்முயற்ச்சி வாழ்வு முழுவதும் தொடருகின்ற பயிற்சியாக தான் இருக்கும். இதை பற்றி தொடருகின்ற ஆய்வு முயற்சிகள் எதிர்காலத்தில் மூளையின் ஆற்றல் கட்டுக்கோப்பை வளர்க்கும் புதுமையான பாதைகளை அறிமுகப்படுத்தலாம்.
இந்நிலையில் பிற உடல் உறுப்புகளின் நலம் உடல் நலத்திற்கு எவ்வளவு முக்கியமோ அவ்வளவுக்கு மூளையின் நலமும் முக்கியம் என்ற கோட்பாட்டை கொண்டுள்ள நரம்பியல் நிறுவனம் மார்ச் திங்கள் 10 முதல் 16 வரையான சர்வதேச மூளை விழிப்புணர்வு வாரத்தில் நலமான மூளை ஆற்றல் பெற்றிருக்க 14 முன்மொழிவுகளை வழங்கியுள்ளது. சாக்லேட், கோக்கோ வெண்ணெய், சர்க்கரை, வெண்ணிலா முதலியவை கலந்த கறுப்பு சாக்லேட், அதிகமாக கற்பதற்கும் மற்றும் நினைவில் கொள்ளும் அளவிற்கு மூளையை இயக்குகிறது. அதிக நேர ஓய்வு எடுத்தால், புதிய தகவல்களை மிக நன்றாக நீண்டகாலம் நினைவில் கொள்ளும் வகையில் மூளையை சேமிக்க செய்யும் திறன் வளர்க்கப்படுகிறது. மீன் சாப்பிடுவதும், மூளை இயக்கத்தை தூண்டுகின்ற செயல்பாடுகளை மேற்கொள்வதும் மூளையின் நலனை அதிகரிக்கும். அதாவது அருங்காட்சியகத்திற்கு சென்ற பின் வெளியே வந்து அங்கு பார்த்தவற்றை நினைபடுத்தி கொள்வது, பாடல்களை மனப்பாடம் செய்வது ஆகியவை மூளை இயக்கத்தை தூண்டுகின்ற செயல்பாடுகளாகும். புதிர்களின் விடை காணும் முயற்சிகள், முக்கிய பயன்பாட்டில் இல்லாத கையை அதிகமாக பயன்படுத்துவது, சிறு கற்களில் விழாமல் நடக்க முயற்சி செய்வது என்ற முயற்சிகள் எல்லாம் மூளை ஆற்றலை நலனை வளர்க்கும் அம்சங்களாம். அன்றாட வாழ்வில் மேற்கொள்ளக்கூடிய சிறுசிறு உடல், உளநல பயிற்சிகள் மூளை ஆற்றலை வளர்க்கும் மதிப்பில்லா உத்திகளாக மாறும். அவைகளை தினமும் செய்து வழக்கமாக்கி கொள்ளலாமே! -நன்றி CRI
No comments:
Post a Comment